Saturday, December 20, 2014

ராமாயணத்தில் ராம சாமி நாயக்கர்?

ராமன் அயோத்தி வாழ் பிராமணர்களின் அழுத்தத்தால் தவத்தில் இருந்த சம்பூகன்  என்பானை அம்பெய்து கொன்ற கதை தெரியும் தானே.

ராமனே விக்டிம் ஆஃப் அவா (அவன் தாயாரை தக்ஜம் செய்தவிக ஆச்சே) வசிஷ்டருக்கு மிந்தி படிச்ச குருகுல ஆசான் ஜென்யூன் பர்சன்னு வச்சுக்குவம்.
ராமனோட கேள்விகளுக்கு நேர்மையா பதில் சொல்றவருன்னு வச்சுக்குவம்.

அந்த குரு குலத்தை ஒட்டி ஒரு சேரி.அந்த சேரில பெரியார் கணக்கா ஒரு பெருசு. அவரை ராமன் தன் குருவா ஏத்துக்கறான்.

இதை மோப்பம் பிடிச்ச பிராமண லாபி இந்த காலத்துல ஸ்கூல் மாத்திர்ராப்ல அந்த காலத்துல குருகுலத்தை மாத்திர்ராய்ங்க.வசிஷ்டர் தான் குரு.

இவருக்கு  கவுண்டர் பார்ட் விஸ்வாமித்திரன் (கதை தெரியுமில்லை)
சத்திரியன் தபஸ் பண்றதான்னு லங்கேஸ்வரன் லொள்ளூ பண்ண உதவி கேட்டு விஸ்வாமித்திரர் வராரு.

ராமன் தலை நகர்ல இல்லாம இருந்தா போதும்னுட்டு வசிஷ்டரே அனுப்பி வைக்கிறாரு  இப்படி மாத்தி யோசிச்சு ஒரு திரைக்கதையே எழுதிரலாம்னு  தான் ஆரம்பிச்சன்.

சனம் ஆதரிச்சா தொடர்வம்.இல்லின்னா திராட்ல விட்டுருவம் .உடுங்க ஜூட்டு.

இடம்: குருகுலம்
இளவரசன்: குருவே ! இந்த குரு குல வாசம் எதற்கு?
குரு:கல்வி கற்க
இளவரசன்: கல்வி எதற்கு?
குரு:உங்களை முழுமனிதர்களாக வடிவமைக்க
இளவரசன்:பிறக்கும் போது யாரும் முழு மனிதர்களாக பிறப்பதில்லையா?
குரு: இல்லை. கல்வி கற்பிக்கப்படா விட்டால் மிருகமாகவே வளர்ந்து வாழ்ந்து மடிந்துவிடுவான்
இளவரசன்:இது எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தும் அல்லவா?
குரு: நிச்சயமாக.

இளவரசன்:கிராமங்களுக்குள் பிட்சைக்கு போகும் போது கிராம எல்லைகளுக்கு அப்பாலும் மனிதர்கள் வாழ்கிறார்கள்.ஆனால்  அவர்களது குழந்தைகள் யாரும் நம் குருகுலத்தில் கல்வி பயில வருவதில்லையே?
குரு:அவர்கள் சூத்திரர்கள்,பஞ்சமர்கள்
இளவரசன்:சூத்திரன் யார்?பஞ்சமன் யார்?
குரு:சூத்திரனுக்கு பிறந்தவன் சூத்திரன் பஞ்சமனுக்கு பிறந்தவன் பஞ்சமன்
இளவரசன்:சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்று கற்பித்தீர்களே..
குரு:அவர்கள் வழி தவறிய விஷ்ணுக்கள்
இளவரசன்: யார் அந்த குழந்தைகளா?
குரு:அவர்களது பெற்றோரும்

இளவரசன்:அவர்களும் குழந்தைகளாகத்தானே பிறந்திருக்கவேண்டும்.வழி தவறியே பிறந்துவிட்டார்களா என்ன?
குரு:அது அப்படியல்ல .முதல் உயிர் கடலில் தோன்றியது. பரிணாமத்தால் புதிய உயிர்கள் பரிணமித்தன. மீன்,ஆமை இப்படியாக .சில கரையேறின - பரிணாமம் தொடர்ந்தது. காட்டுக்குள் புகுந்தன. அங்கும் பரிணாமம் தொடர்ந்தது.குரங்கு பிறந்தது.குரங்கிலிருந்து  மனிதன் பரிணமித்தான்.
இளவரசன்:மனித குலத்தின் மூல புருஷன் குரங்குதானா?
குரு:அது அப்படியல்ல ஒரே உயிர் பல உடல்களில் சதிராடுகிறது.அந்த ஆதி உயிரையே விஷ்ணு என்கிறோம்

இளவரசன்:பிறகு ஏன் அந்த குழந்தைகளையும் அவர்களை பெற்றவர்களையும் வழி தவறிய விஷ்ணுக்கள் என் கிறீர்கள்?
குரு:சொல்கிறேன்.மனிதன் காட்டுக்குள் வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகையில் மனிதனின் முக்கிய உணவு மாமிசம். அதை பெற ஒரே வழி வேட்டை.

அதில்  குரூர மிருகங்களால் வரும் ஆபத்துக்களை சமாளிக்க உடல் வலிமை பெரும்பாலும் தேவைப்பட்டது. வலிமையுடையவனே தலைவன். அவனும் அவனுக்கு உதவியானவர்களும் சத்திரியர்கள் எனப்பட்டனர்.
அதே சமயம் காட்டு வாழ்க்கையில்  கொஞ்சம்   சூட்சும அறிவும் தேவைப்பட்டது. கூட்டத்தில் சூட்சும அறிவுடையவன் பிராமணானக பரிணமித்தான்.

மனிதர்களின் வேட்டைக்கு பயந்து மிருகங்கள் வலசை போக -காட்டுத்தீ போன்றவை விரட்ட மனிதன் இடம் பெயர்ந்தான். நதி ஓரமாக அவன் பயணம் தொடர்ந்தது. நிலத்தில் போட்டது முளைக்கும் என்ற சூட்சுமம் பிடிபட ஆங்காங்கே தங்கி பயிர் செய்து அறுவடை செய்து பயணத்தை தொடர்ந்தான். இது போன்று ஒரு கூட்டமே அல்ல பல கூட்டங்கள். அவை ஒன்றுக்கொன்று சந்தித்த போது யுத்தம் -யுத்தம் முடிந்த பின் பேச்சு -பங்கீடு இத்யாதி. இவற்றில் பிராமணராய் பரிணமித்தோர் முக்கிய பங்கு வகித்தனர்.

பின்னொரு கட்டத்தில் மனிதன் ஸ்திர வாசம் மேற்கொண்டான். நதிக்கரை நாகரீகங்கள் தோன்றின. வியாபாரம் துவங்கியது. அதில் திறம் கொண்டோர் வைசியராய் பரிணமித்தனர்.

மேலே சொன்ன எந்த திறனும் இல்லாதோர் நான் சொன்ன மூன்று கூட்டத்தாருக்கும் - சத்திரிய,பிராமண,வைசிய கூட்டத்தாருக்கும் ஊழியம் செய்ய பணிக்கப்பட்டனர். அவர்தம்  வழி தோன்றல்களே நீ சொல்லும் குழந்தைகள்.

இளவரசன்: ஐயனே ஒரு சந்தேகம் .. சேற்றில் செந்தாமரை முளைக்கிறது,சிப்பியில் முத்து விளைகிறது. ஒரு சூத்திரனில் இருந்து ஒரு பிராமணன் தோன்ற முடியாதா?
குரு: நான் சொன்ன நான்கு குழுவினரிடையில் கலப்பு ஏற்பட்டால் நீ சொன்னதும் நடக்கலாம். அது நடவாதிருக்கத்தானே கட்டுப்பாடுகள்.
இளவரசன்:குருவே! இந்த குழுக்கள் என்றுமே ஒன்றாக முடியாதா?
குரு:முடியலாம். முதல் மூன்று குழுக்கள் தமது சுயலாபம் கருதி ஒன்றாகலாம்.ஆனால் நாலாம் வர்ணத்தினர் விஷயத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

இளவரசன்:ஏன்?
குரு:அவர்கள் பஹுஜனங்கள்.எண்ணிக்கையில் மிக அதிகம்,உடல் வலிமையில் மற்ற மூன்று இனத்தார் போட்டியிடவே முடியாது. இனக்கலப்பு ஏற்பட்டால் முதல் மூன்று குழுவினர் தம் தனிச்சிறப்புகளாய் வைத்திருக்கும் விஷய ஞானம் பரவலாகிவிடும்.அவர்கள் அனுபவித்து வரும் சலுகைகள் காலாவதியாகிவிடும்.
இளவரசன்:  நம் ஆசிரமத்தில் சுவையற்ற கனிதரும் மரத்தையும் , சுவையான கனிதரும் மரக்கிளையையும் ஒட்டு போட்டு நடுகிறோமே..அதை போல் அவர்களையும் நம்முடன் இணைத்து கொண்டால் ?
குரு: ஆஹா.. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை நிரூபிக்கிறாய். ஆனால் ஒன்று நீ நாளை சக்கரவர்த்தியாகவே மகுடம் சூட்டி அரியணையில் அமர்ந்தாலும் இது அசாத்தியம்

இளவரசன்: ஏன் ஐயனே!
குரு: நான் ஏற்கெனவே சொன்னதுதான்.முதல் மூன்று இனத்தினர் ஒப்பமாட்டார்கள். உன் கதையையே முடிக்குமத்தனை சக்திவாய்ந்தவர்கள் அவர்கள்.
இளவரசன்: நன்றி ஐயனே ..ஆசிரம செடிகளுக்கு நீர் பாய்ச்சும் வேளை நெருங்குகிறது .நான் அந்த பணியை கவனித்தாகவேண்டும்.
குரு: ஆகட்டும்
இடம்: கிராம எல்லை
சிறுவன்: ஏய்..இங்கெல்லாம் நீ வரக்கூடாது. போ போ..
இளவரசன்:ஏன்?

சிறுவன்: நாங்கல்லாம் தீட்டுக்காரங்க.எங்க இடத்துக்கு வந்தா உனக்கு தீட்டு.எங்களை போலவே உன்னையும் குருகுலத்துல சேர்த்துக்கமாட்டாங்க.விரட்டி விட்டுருவாங்க
இளவரசன்:இதை நீ நம்புகிறாயா?
சிறுவன்: நான் நம்பினா என்ன நம்பாட்டி என்ன நாடே நம்புதே..
இளவரசன்:இதை மாற்ற வேண்டும்
சிறுவன்:ஹ.. என்ன நீ பெரிய ராசா வீட்டு பையன் மாதிரி பேசறே?
இளவரசன்:உண்மையிலேயே நான் இளவரசன் தான்.
சிறுவன்:அவனா நீயி..
இளவரசன்:ஏன் இந்த எள்ளல்?
சிறுவன்: நாங்கல்லாம் எங்கப்பனுக்கே பிறந்தோம். நீ ?
இளவரசன்: என்ன என்ன நீ சொல்வது?
சிறுவன்:போய் ..உன் குருவையே கேளு சொல்வாரு.
இளவரசன்:இதற்கு போய் அவரை ஏன் சிரமப்படுத்தவேண்டும் .உனக்கு தெரிந்தால் நீயே சொல்.

சிறுவன்:மடையா மடையா.. அப்பா அம்மாவும் முத்தம் கொடுத்துக்கிட்டா குழந்தை பிறக்குமாம். உங்க அப்பா உன் அம்மாவுக்கு பல வருசம் முத்தம் கொடுத்தும் குழந்தையே பிறக்கலியாம். அதனால உங்க அரண்மனையில பெரிய யாகம் செய்து யாக குண்டத்தை சுத்தி திரை கட்டி நாலு ஐயரு மாரு முத்தம் கொடுத்துட்டாய்ங்களாம்.அப்படி பிறந்தவன் தான் நீ
இளவரசன்: நான் நம்பமாட்டேன். எங்கப்பா இந்த நாட்டுக்கே ராஜா.அவர் சொடுக்கு போட்டால் எதுவும் நடக்கும்.

சிறுவன்:இந்த பப்பெல்லாம் அவிக விஷயத்துல நடக்காது.உங்கப்பா சொடுக்கு போடவே அவிக தான் உத்தரவு கொடுக்கனும்.
இளவரசன்:சீ சீ.. இந்த விஷயம் எல்லா மக்களுக்கும் தெரியுமா?
சிறுவன்:ரெம்ப கவலைப்படாதே.. எங்க சேரிலயே பெருசா தாடி வச்ச தாத்தா ஒருத்தரு தான் இந்த மாதிரி பல விஷயங்களை மரத்தடில  உட்கார்ந்து சொல்லிக்கிட்டு கிடப்பாரு. ஆனால் பலரும் காதை பொத்திக்கிட்டு போயிருவாய்ங்க.

இளவரசன்: நான் அவரை சந்திக்க முடியுமா?
சிறுவன்:உனக்கு குருகுலத்துக்கு திரும்பி போற உத்தேசமே இல்லையா?
இளவரசன்:அதை நான் பார்த்துக்கறேன்..நீ என்னை அவர் கிட்டே  கூட்டிப்போ
சிறுவன்:உன் தலை எழுத்து.வா போவலாம்.

இடம்: சேரிக்குள்ளான மரத்தடி
எங்கும் இருள் வெண் தாடி வேந்தரின் முகம் மட்டும் ஜொலிக்கனும்.இளவரசனுக்கும், சிறுவனுக்கும் முக வித்யாசம் தெரியற அளவுக்கு லேசு பாசான வெளிச்சம் இருக்கனும்.

No comments:

Post a Comment